tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதல்வர் தலைமையில் அரசியலமைப்பு தின உறுதிமொழி

சென்னை, நவ. 26 - அரசியலமைப்பு நாளை யொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும்  அமைச்சர்கள், அரசிய லமைப்பு முகவுரையை வாசி த்து உறுதிமொழி ஏற்றனர்

நாட்டின் அரசியலமை ப்புச் சட்டம், அரசியல் நிர் ணய சபையால் ஏற்கப்பட்ட நாளான ‘நவம்பர் 26’  ஒவ்வோராண்டும் அரசிய லமைப்பு நாளாகக் கொண் டாடப்பட்டு வருகிறது. இதன் 75-ஆவது ஆண்டையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலி யுறுத்தி கருத்து பதிவிட்டு வருகின்றனர். அரசிய லமைப்பு ஏற்கப்பட்ட நாளை யொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசியலமைப்பு முகவுரையை வாசித்து உறுதிமொழி ஏற்றார்.  சென்னை தலைமைச் செய லகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்களும் பல்வேறு துறை சார்ந்த செயலாளர்களும் அரசி யலமைப்பு முகவுரையை வாசித்து அவர்களும் உறுதிமொழி ஏற்றனர்.

முன்னதாக, முத லமைச்சரின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் அனைத்து அரசு அலுவல கங்கள் மற்றும் பள்ளி-கல்லூரிகளிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. 

வங்கக் கடலில் உருவாகும் பெங்கல் புயல்  4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

சென்னை, நவ. 26 -  வங்கக் கடலில் நில வும் காற்றழுத்தத் தாழ்வு  மண்டலம், ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலை யில், புதன்கிழமை (நவ.27) அன்று புயலாக மாற வாய்ப் புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாக வுள்ள இந்த புயலுக்கு ‘பெங்கல்’ என்று பெயரி டப்பட உள்ளது. இது சவூதி அரேபியா பரிந்துரைத்த பெயராகும்.

ஆரஞ்சு அலர்ட் 

தற்போதைய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல மானது, வடக்கு - வடமேற்கு திசையில் தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்பதால், சென்னையில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப் புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய  வாய்ப் புள்ளதால், சென்னை, திரு வாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட் டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் அறிவுறுத்தல்!

இதனிடையே, கனமழை முன்னெச்சரிக்கை பணி கள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின் “மழை எச்சரிக்கை மாவட் டங்களில் நிவாரண முகாம் களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ள நீர் தேங்கி பயிர்  சேதமடையாமல் இருக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மின்சார வசதி தடையின்றி கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கனமழையின் போது மக்களை தாழ்வான பகுதிகளில் இருந்து முகாம்களுக்கு அழைத்து வர வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.