புதுதில்லி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 17-ஆவது தில்லி மாநில மாநாடு நவம்பர் 22-24 தேதிகளில் தில்லி யில், சுர்ஜித் பவனில் தோழர் சீத்தாராம் யெச்சூரி அரங்கில் நடை பெற்றது. கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத் மாநாட்டைத் துவக்கி வைத்தார். அவர் தன் துவக்கவுரையில் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் பின்னணியையும் விளக்கியதுடன், கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி நாடு முழுவதும் பல்வேறு மட்டங்களி லும் நடைபெற்று வரும் கட்சியின் மாநாடுகள் குறித்தும் விவரித்தார். சென்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அளிக்கப்பட்ட கடமை களின் அடிப்படையில் நடந்துள்ள வேலைகள் குறித்து ஆக்கப்பூர்வ மான விவாதம் இம்மாநாட்டில் நடைபெற வேண்டியதன் அவசியத் தையும் கோடிட்டுக் காட்டினார்.
மாநாட்டின் அரசியல்-ஸ்தாபன அறிக்கைகள் ராஜீவ் குன்வார் மற்றும் அனுராக் சக்சேனா ஆகியோரால் சமர்ப்பிக்கப் பட்டது. இதன் மீதான விவாதத்தில் 71 பிரதிநிதிகள் கலந்து கொண் டார்கள்.
வரவிருக்கும் காலங்களில் கட்சி மேற்கொள்ள வேண்டிய பணி யினை வரையறுக்கும் விதத்தில் எட்டு தீர்மானங்களும் நிறை வேற்றப்பட்டன. கே.எம்.திவாரி, விவாதங்களுக்குப் பதில் அளித்து தொகுப்புரை வழங்கியபின் செய லாளர் அறிக்கையும், அரசியல்-ஸ்தாபன அறிக்கையும் ஒருமன தாக நிறைவேற்றப்பட்டன.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் நிறைவு ரையாற்றினார். அவர் தன் நிறைவு ரையில், கடந்த மூன்றாண்டுகளில் தில்லியில் நடைபெற்ற பணியில் இருந்த ஆக்கப்பூர்வமான அனுப வங்களை வரவேற்றார். மேலும் இம்மாநாடு நிறைவேற்றிடும் எதிர்காலக் கடமைகளை ஒட்டு மொத்த கட்சியும் முழுமனதோடு செயல்பட்டு நிறைவேற்றிடும் என்னும் தன் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
புதிய மாநிலக்குழு
மாநாட்டில் 30 பேர் கொண்ட மாநிலக் குழு தேர்வு செய்யப் பட்டது. அனுராக் சக்சேனா மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப் பட்டார். கே.எம்.திவாரி, பி.எம்.எஸ். கிரேவால், ஆஷா ஷர்மா, பிரிஜேஷ் குமார் சிங், சுபிர் பானர்ஜி, ஷீபா ஃபரூக்கி, ராஜீவ் குன்வார், அனி யன் பி.வி. ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 2025 ஏப்ரலில் மதுரையில் நடைபெற வுள்ள கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்துகொள்வ தற்காக நான்கு பிரதிநிதிகளையும், இரண்டு மாற்று பிரதிநிதிகளையும் மாநாடு தேர்வு செய்தது.
தில்லியில் ஒட்டுமொத்த கட்சி யும், ஜனநாயகத்தைப் பாதுகாத்தி டவும், வர்க்கப் போராட்டத்தை முன்னிலும் பன்மடங்கு உக்கி ரத்துடன் முன்னெடுத்துச் செல்ல வும் தீர்மானித்துள்ளது. (ந.நி.)