india

img

75 ஆண்டுகளில் சமூகநீதி, வளர்ச்சிக்கான இலக்கை அடைந்துள்ளோம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு முற்போக்கான ஆவணம்!

புதுதில்லி, நவ. 26 - “இந்திய அரசியலமைப்பானது, ஒரு முற்போக்கான ஆவணம்”; என்றும், “அதன் மூலம் சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான இலக்குகளை நாம் அடைந்துள்ளோம்” எனவும் குடி யரசுத் தலைவர் திரெளபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு 75  ஆண்டுகளை எட்டும் இந்த வேளை யில், “அனைத்து குடிமக்களும் அர சியலமைப்பு இலட்சியங்களை உள்வாங்கி, அடிப்படைக் கடமை களைச் செய்ய வேண்டும்”; என்றும்,  2047-ஆம் ஆண்டிற்குள் ‘வளர்ச்சி யடைந்த இந்தியா’ என்ற இலக்கை அடைய உழைக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

பழைய நாடாளுமன்ற மைய  மண்டபத்தில் கூட்டுக் கூட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 நவம்பர் 26 அன்று அரசியல் நிா்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப் பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தை யொட்டி, பழைய நாடாளுமன்றக் கட்ட டத்தின் மைய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு அவைகளின் சிறப்பு கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரையாற்றினார். 

அப்போது மேற்கண்டவாறு  கூறிய அவர், “இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகளை வடிவமைப்பதில் அர சியலமைப்பு நீடித்து நிலைத்திருக்கும் முக்கியத்துவம் பெறுகிறது” என்றார்.

நிர்ணய சபையில் பங்காற்றிய பெண் உறுப்பினர்கள்

அரசியலமைப்பை உருவாக்கு வதில் அரசியல் நிர்ணய சபையில் இடம்பெற்றிருந்த 15 பெண் உறுப்பினர்களின் பங்களிப்பையும் நினைவுகூர்ந்த குடியரசுத் தலைவர் முர்மு, பெண்கள் இடஒதுக்கீடு குறித்த  சட்டம் நமது ஜனநாயகத்தில் பெண் களுக்கு அதிகாரமளிக்கும் புதிய சகாப்தத்தை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதைய ஒன்றிய பாஜக அரசை பாராட்டும் வகையில், “கடந்த சில  ஆண்டுகளில், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்காகவும், குறிப்பாக  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக வும் அரசாங்கம் முன்னோடியில்லாத பல பணிகளைச் செய்துள்ளது. ஏழை மக்களுக்கு இப்போது உடல்நலம், வீடு மற்றும் உணவு தொடர்பான பாது காப்பு கிடைத்துள்ளது” என்றும் முர்மு  தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவை வரி, பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்கள் அமலாக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் என பாராட்டினார்.

சமஸ்கிருதம், மைதிலியில் அரசியலமைப்புச் சட்டம்

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சமஸ்கிருதம், மைதிலி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட அரசிய லமைப்புச் சட்டத்தின் புத்தகங்களை குடியரசுத் தலைவர் வெளியிட்டார். அரசியலமைப்புச் சட்டம் எனும் ஆவணம் உயர்த்திப் பிடிக்கும் கொள்கைகளை சுருக்கமாக எடுத்துரைக்கும் அரசியலமைப்புச் சட்ட  முகப்புரையை குடியரசுத் தலைவர் வாசிக்க, அதனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் திருப்பி வாசித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினத்தை கெளரவப் படுத்தும் வகையிலும் இந்தியாவின் ஆட்சி மற்றும் சமூக கட்டமைப்பில் அரசியலமைப்பின் நீடித்த பாரம் பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலும் நாணயம், அஞ்சல்தலை ஆகியவற்றை யும் குடியரசுத் தலைவர் வெளியிட் டார். 

இந்த சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர் முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மட்டும் உரையாற்றி னர். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர்களின் கோரிக்கை புறக்கணிப்பு

முன்னதாக, அரசியலமைப்பு தினத்தின் 75-ஆவது ஆண்டை முன்னிட்டு நடைபெறும் நாடாளு மன்ற கூட்டுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி யிலுள்ள கட்சிகள் கோரிக்கை விடுக்கப் பட்டிருந்தன. “நாடாளுமன்ற ஜனநாய கத்தின் சிறப்பான நலன்கள் மற்றும் பாரம்பரியத்தின் மீது நாங்கள் நம்பிக் கை வைத்துள்ளோம். இந்த வர லாற்று ரீதியிலான தருணத்தில் இரண்டு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச அனுமதிக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியிருந்தனர். மக்களவைத் தலைவருக்கு முறைப்படி கடிதங் களையும் எழுதியிருந்தன. ஆனால், கூட்டுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலை வர்கள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனிடையே, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தனித்தனியாக தில்லி யில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி களை நடத்தின. அதில், கடந்த 10 ஆண்டுகளில், ஒன்றிய பாஜக அரசு எந்தெந்த வகையிலெல்லாம் அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களை ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கியுள்ளது என்று பட்டியலிட்டனர்.