tamilnadu

img

மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையை ரூ. 6 ஆயிரமாக உயர்த்தி வழங்குக!தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்!!

சென்னை, நவ. 26 - மாற்றுத் திறனாளிகளுக் கான உதவித் தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்; விண்ணப் பங்களை காலதாமதமின்றி பரிசீலிப்பதுடன், வயது தளர்வு கமிட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்ச ருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

முதன்முதலில் தனித்துறையை ஏற்படுத்திய கலைஞர்

தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் சொல்லொணா வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பிரச்சனைகளை யாரும் கவனிக்காத சூழலில் டாக்டர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது தனித்துறையை ஏற்படுத்தி நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி யது பெரும் பாராட்டையும், வரவேற்பை யும் பெற்றது. 

இருப்பினும் தமிழகத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை உறுதி செய்தும், உதவித் தொகையை உயர்த்தி  வழங்கியும் கண்ணியமான வாழ்க்கை யை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென தொடர்ந்து போராடி வருகின்றனர். 

பெரும்பாலானோர் ஏழைக்  குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்

மாற்றுத் திறனாளிகளில் பெரும்பா லானோர் ஏழை- எளிய, அன்றாட கூலித் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்தவ ர்களே ஆவார்கள். இதனால் இவர்களின் வாழ்நிலை குடும்பத்திற்குள்ளும், வெளி யிலும் மிகவும் மோசமான துயரத்தி லும், அவமானத்திலும் உழன்று கொண்டி ருக்கும் நிலைமையே உள்ளது. இச்சூழ லில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்திட அண்டை  மாநி லங்களான புதுச்சேரியில் ரூ. 4,800,  தெலுங்கானாவில் ரூ. 4,000, ஆந்திரா வில் சாதாரண ஊனமுற்றோ ருக்கு ரூ. 6000, கடும் ஊன முற்றோருக்கு ரூ. 10,000, வீட்டை விட்டு வெளியே நட மாட இயலாத கடும் ஊன முற்றோருக்கு ரூ. 15,000 மாதாந்திர உதவித்தொகை யாக வழங்கப்படும் நிலை யில் தமிழகத்தில் மட்டும் குறை வான உதவித் தொகைவழங்கப்படுகிறது.

கடும் ஊனமுற்றோருக்கு  ரூ. 10 ஆயிரம் வழங்குக!

எனவே, தமிழக அரசும், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூ. 6,000 மற்றும் கடும் ஊனமுற்றோருக்கு ரூ. 10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

விண்ணப்பித்தும் உதவித் தொகை கிடைக்காமல் நீண்ட காலமாக காத்தி ருக்கும் அனைவருக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்கிட வேண்டும்.

18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத் திற னாளிகளுக்கு உதவித் தொகை வழங்கு வதற்காக மாவட்ட ஆட்சியர்கள் தலை மையில் அமைக்கப்பட்டுள்ள வயது தளர்வு கமிட்டியை ரத்து செய்வதோடு, வயது வரம்பு பாராமல் அனைத்து வயது மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும்.

டிசம்பர் 3- இல் அறிவிப்புகள் வெளியிட வேண்டுகிறோம்

தில்லி உயர்நீதிமன்ற வழிகாட்டுத லின்படி அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பி த்துள்ள மாற்றுத் திறனாளிகள் குடும்பத் தினர் அனைவருக்கும் உடனடியாக AAY  குடும்ப அட்டை வழங்கிட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் துறைக்கு பொறுப்பாக இருக்கும் தமிழக முத லமைச்சர் மாற்றுத் திறனாளிகளின் நியாய மான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ‘டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினம்’ அன்று அறிவிப்பு களை வெளியிட்டு மாற்றுத் திறனாளி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.