மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. இந்த சூழலில், புதிய ஆட்சி அமைப்பதற்காக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை காபந்து முதல்வராக அவர் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமை மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் தேர்வு செய்துள்ளதாகவும், இதனால் ஏக்நாத் ஷிண்டே தரப்பு அதிருப்தியில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறன.