உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் நடந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஷாஜி ஜமா மசூதி, இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதா என்று ஆய்வு செய்ய சென்ற அம்மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திரண்டனர். அப்போது, வெடித்த கல்வீச்சு மற்றும் கலவரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அப்பகுதியில் 24 மணி நேரத்திற்கு இணைய சேவை முடக்கம். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.