தோழர் விபிசி நினைவு ரத்ததான முகாம்
சென்னை, மே 8- தொழிற்சங்க மூத்த தலைவர் தோழர் வி.பி.சிந்தன் 38ஆவது நினைவு தினத்தை ஒட்டி சிஐடியு வட சென்னை மாவட்டக் குழு சார்பில் ரத்ததான முகாம், கண் பரி சோதனை முகாம் ஓட்டேரியில் உள்ள ஏ.பி. நினைவகத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் நடை பெற்றது. முகாமை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் துவக்கி வைத்தார். 60 பேர் குருதியை தானமாக அளித்தனர். ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை மருத்துவர் வி.நவீன்குமார், செவிலியர் பா.பிரேமா தலைமையிலான மருத்துவக் குழுவினர் குருதியை சேகரித்தனர். அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் பெப்ரிசியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் சிஐடியு நிர்வாகிகள் ஆர்.லோக நாதன், ஏ.ஆர்.பாலாஜி, மா.பூபாலன், கே.ரவிச்சந்திரன், பி.லூர்துசாமி, கே.ஆர்.முத்துசாமி, வி.ஜெயகோபால், ஆர்.மணி மேகலை, பி.கோவிந்தசாமி, சு.பால்சாமி, எம்.சாலட், டி.சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.