பனை விதைகளை ஆட்சியர் பிரதாப் நடவு
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகில் உள்ள நெற்குன்றம் ஊராட்சி வேட்டைக்கார பாளையம் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள குளத்தை சுற்றியுள்ள பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் வனத்துறை ஆகிய துறைகள் சார்பாக பனை விதைகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்தார். உடன் அதிகாரிகள் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
