தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை பிப்ரவரி 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், விலையில் (ஜெனரிக்) மருந்து மாத்திரைகளையும் பிற மருந்துகளையும் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற் கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, தற்போது தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை பிப்ரவரி 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் மட்டும் 33 மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன. இதன் மூலம் மருந்து, மாத்திரைகள் குறைந்த விலையில் கிடைக்க இருக்கிறது.