புதுதில்லி,பிப்.12- ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் 96ஆவது இடத்தை பிடித்து பின்னடவை சந்தித்துள்ளது இந்தியா
சர்வதேச வெளிப்படைத்தன்மை என்ற தன்னார்வ அமைப்பு மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளின் கண்ணோட்ட குறியீடு தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
இந்த பட்டியலில் 2023ஆம் ஆண்டு 93ஆவது இடத்திலிருந்த இந்தியா 2024ஆம் ஆண்டில் 96ஆவது இடத்தில் உள்ளது. இது கடந்த ஓராண்டில் இந்தியாவில் ஊழல் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
ஊழல் மிகுந்த நாடு என்றால் 0 மதிப்பெண்ணும், ஊழல் இல்லாத நாடு என்றால் 100 மதிப்பெண் என்ற அடிப்படையில் நாடுகள் தரவரிசைப் படுத்தப்படுகிறது. இதில் இந்தியாவிற்கு வெறும் 38 மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளது.
ஊழல் குறைந்த முதல் 10 நாடுகளில் டென்மார்க் 90 மதிப்பெண்களுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது, அதைத் தொடர்ந்து பின்லாந்து(88) மற்றும் சிங்கப்பூர்(88) அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.