சென்னை:
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற் கொண்டார்.
கொரோனா இரண்டாம் அலையால் தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பன்னிரண் டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய் யப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களில்மதிப்பெண் கணக்கீட்டு முறையை இறுதி செய்து தேர்வு முடிவுகளை வெளியிட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மதிப் பெண் கணக்கீட்டு முறை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதையடுத்து. தமிழக மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து முதல்வர் ஆலோசனை மேற் கொண்டார். இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டுக்காக அவர்களின் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்ற அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.