tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

தலைசிறந்த 100 மாநகரங்களின் 
பட்டியலில் சென்னைக்கு 34 வது இடம்

ரெசோனன்ஸ் கன்சல்டன்சி (Resonance Consultancy) என்ற தனியார் நிறுவனம், ஆசியா -ஃபசிபிக் பிராந்தியத்தில் தலை சிறந்த 100 மாநகரங்களின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. 2025-ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலை சிங்கப் பூரில் அண்மையில் நடைபெற்ற  விழாவில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிறந்த 33 மாநகரங்களுடன் சீனா இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 27 தலை சிறந்த மாநகரங்களுடன் இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. பட்டி யலில் ஒன்பது நகரங்களைக் கொண்ட ஜப்பானுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலான பங்களிப்பைக் கொண்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த பிராந்திய மான ஆசியா - ஃபசிபிக் பகுதிகளில் உள்ள மாநகரங்களை விரிவாக மதிப்பீடு செய்து இப்பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளதாக தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மாநகர பகுதிகளின் மக்கள்தொகை (10 லட்சத்துக்கும் மேல்), அந்நகரங்களுக்கு வருகை தரும் பார்வையாளர்கள், முதலீட்டாளர்கள், தனிநபர் வருமானம், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி, உள்கட்டமைப்பு, சுகாதார வசதி, வீட்டு வாடகை, பிரபலமான முக்கிய இடங்கள், கூகுள் தேடல் உள்ளிட்ட 25 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது அந்நிறுவனம். 100 மாநகரங்களை கொண்ட இந்த தரவரிசைப் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மாநகரங்கள் உட்பட மொத்தம் 27 மாநகரங்களுடன் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னை பட்டியலில் 34வது இடத்தையும், திருச்சிராப்பள்ளி 70வது இடத்தையும் பிடித்துள்ளன. சேலம், கோயமுத்தூர் ஆகிய மாநகரங்கள் முறையே 79, 94 வது இடங்களை பிடித்துள்ளன.

 

சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை பெற அவகாசம் நீட்டிப்பு 

சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலை யோர வியாபாரிகள் தங்களுக்கான அடையாள அட்டையை, வரும் 28ம் தேதி வரை பெறலாம், என ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில், சுமார் 35,000க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பல்வேறு விதமான வணிகங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் 20ஆயிரத்திற்கும் அதிகமானோர் தள்ளு வண்டிகளில் சாலையோர உணவகங்களை நடத்தி வருகின்றனர். எழும்பூரில் உள்ள வார்டு 61ல் உள்ள எத்திராஜ் சாலை மற்றும் வார்டு 73ல் உள்ள டெமெல்லோஸ் சாலை போன்ற முக்கிய பகுதிகள் விற்பனை மண்டலங்களாக மாற்றப்படு கிறது. இதை தொடர்ந்து, அந்த இடங்களில், விற்பனை யாளர்களுக்கான இடங்களை மாநகராட்சி ஒதுக்கும். இந்த பணிகள் முடிவடைந்ததும், அங்கு கடை நடத்த உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு புதிதாக வடி வமைக்கப்பட்ட விற்பனை வண்டிகளை வழங்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான பணி கள் தீவிரமாக நடந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நகர விற்பனை குழுவின் 8வது கூட்டத்தில், மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியா பாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக சிப் பொருத்திய க்யூஆர் கோடு மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கு வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்களுக்கான அடையாள அட்டையை, வரும் 28ம் தேதி வரை பெறலாம், என ஆணையர் தெரிவித்துள்ளார்.

மணலி புதுநகர் புதிய தகன மேடை

சென்னை, பிப்.19-  மணலி புதுநகர் பிரதான சாலையில் உள்ள மயான பூமியை சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில், சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.1.60 கோடி செலவில் நவீன எரியூட்டு தகன மேடை அமைக்கப்பட்டது. இதை, துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சியில் வைத்து காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்த நவீன எரியூட்டு தகன மேடையை 15, 16வது வார்டுகளை சேர்ந்த மணலி புது நகர், பகுதி 1, 2, ஆண்டார்குப்பம், இடையஞ்சாவடி, நாப்பாளையம் பகுதிகளை சேர்ந்தவர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாளை மக்கள் குறைதீர்  முகாம்

சென்னை, பிப்.19- அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களைச் சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்திடவும், பொதுமக்க ளின் குறைகளை கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில் மக்கள் குறை தீர்வு சிறப்பு முகாம்கள் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்ட லங்கள் வாரியாக நடைபெறவுள்ளது. அதன்படி 1 மற்றும் 5வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் வரும் 21ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.