tamilnadu

img

சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை வரை மூடல்!

சென்னை,நவம்பர்.30- கனமழை காரணமாக நாளை அதிகாலை 4 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயலின் பாதிப்பால் ஏற்கனவே இன்று இரவு 7 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பால் தற்போது வரை 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.