tamilnadu

img

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆந்திரம் மற்றும் வடக்கு தமிழகத்துக்கு இடைப்பட்ட வங்கக்கடலில் புதிதாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணத்தால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை செப்.22 முதல் செப்.27 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 170 மிமீ மழை பதிவானது. அண்ணா பல்கலைக்கழகம், ஆலந்தூர், வளசரவாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் தலா 30 மிமீ, மதுரவாயல், ராயபுரம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மணலி, வானகரம், கோடம்பாக்கம், பெருங்குடி ஆகிய பகுதிகளில் தலா மிமீ மழை பதிவானது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செப்.22, 23 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக மதுரையில் 102.56 டிகிரி பாரன்ஹீட், பாளையங்கோட்டை 101.48, ஈரோடு-101.12 டிகிரி பாரன்ஹீட் என மொத்தம் 4 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.