tamilnadu

சென்னையில் 5 இடங்களில் சிபிஐ சோதனை

சென்னை,செப்.6- நில அபகரிப்புக்கு உட ந்தையாக இருந்த புகாரில் சென்னையில்  காவல் ஆய்வாளர் தொடர்புடை யை 5 இடங்களில் சிபிஐ அதி காரிகள் சோதனை நடத்தி னர். சோழிங்கநல்லூரில் கார்த்திக் என்பவர் தனக்குச்  சொந்தமான 18.25 சென்ட் நிலத்தை கோபால கிருஷ்ணன் என்பவர் சட்ட விரோதமாக அபகரித்துள் ளார் என்றும், இதை தடுக்க முயன்ற போது ரவுடிகளை வைத்து மிரட்டல் விடுத்த தாகவும், எனவே, தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். நிலத்தை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

அந்தவகையில், நில  அபகரிப்புக்கு உடந்தை யாக இருந்ததாக நீலாங்க ரை காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஆனந்தபாபு தொடர்புடைய 5 இடங் களில் சிபிஐ அதிகாரிகள் செப்டம்பர் 6 அன்று சோத னை நடத்தினர்.  சென்னை அண்ணாநகர் காவலர் குடி யிருப்பில் உள்ள ஆனந்த பாபு வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து சாஸ்திரி நக ரில் வசித்து வரும் ஹரிணி என்பவரது வீட்டிலும், பெச ன்ட்நகர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட காவல் ஆய்வாளர் ஆனந்த பாபு தொடர்புடைய 5 இடங் களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில்  காவல் ஆய் வாளரின் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி யதாக கூறப்படுகிறது.