tamilnadu

ஆளுமைக்கு அஞ்சலி...!

பிறந்தோம்
வாழ்ந்தோம்
மறைந்தோம்
என்றில்லாமல்...
உழைக்கும் 
மக்களின்
உரிமைக் குரலாய்...
எளியோர் வறியோரின்
எண்ணக் குரலாய்...
ஒடுக்கப்பட்டோரின்
உரத்த குரலாய்...
சிறுபான்மையினரின்
சிந்தனைக் குரலாய்...
பாராளுமன்றத்தின் 
உள்ளும் புறமும் 
ஒட்டு மொத்த
இந்தியாவின் 
ஓங்கிய குரலாய்...
ஒலித்த
சமரசமில்லா
போராளிக் குரல்...
ஓய்ந்த பின்னும் 
எதிரொலி
என்றும் கேட்கும்!

மரித்த பின்னும் 
மானுடம் 
பயன்பெற
மருத்துவ 
ஆராய்ச்சிக்கு 
தன்னுடல் ஈந்த
மக்கள் நாயகனே!
நீ காட்டிய வழி
இயக்கம்
முன்னெடுத்து
இந்திய தேசம்
காப்போம் என
அறுதியிட்டு 
கூறுமிந்த
உறுதி மொழியே...
உமக்கான 
எம் செவ்வஞ்சலி...!

 

- வத்சலா ரமணி,
கோவை.