tamilnadu

காசாளர் மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி மனு

சென்னை, மே 8-லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் காசாளராக பணியாற்றிய பழனிச்சாமி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவரது மகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அவரது நிறுவன ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வந்த, கோவை வடமதுரையைச் சேர்ந்த பழனிச்சாமியிடமும் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிச்சாமி இம் மாதம் 3 ஆம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். வருமான வரித்துறை யினரின் சித்ரவதை காரணமாகவே தன் தந்தை மரணம் அடைந்துள் ளதாகவும், தந்தையின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதால் அது கொலை எனவும் கூறி, பழனிச்சாமியின் மகன் ரோஹின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் மனுவில் கோரப் பட்டுள்ளது. தன் தந்தையின் உடலை தங்கள் தரப்பு கூறும் ஒரு மருத்துவரை வைத்து மறு பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் பழனிச்சாமியின் மகன் கோரியுள்ளார்.