சி.எச்.பாலமோகனன் நினைவு தினம் அனுசரிப்பு
புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான சி.எச் பாலமோகன் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தேங்காய் திட்டு வித்யா பவன் பள்ளி அருகே மரக்கன்று நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை (மே 8) நடைபெற்றது. சம்மேளன செயல் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன்,செயலாளர் முனுசாமி,சம்மேளன நிர்வாகிகள் சீதாராமன், வின்சென்ட் ராஜ், ஜவஹர், லலிதா மற்றும் அரசு ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். முன்னதாக கருவடிக்குப்பம் சுடுகாட்டில் அமைந்துள்ள சி.எச்.பாலமோகனன் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
எழும்பூர் பகுதி, கே.பி.பார்க் பகுதியில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க கோரி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமனிடம், சிபிஎம் கிளைச்செயலாளர் வீ.சரவணன் மனு அளித்தார். மத்தியசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.முருகன், பகுதிச் செயலாளர் வே.ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் பி.கே.மூர்த்தி, பகுதிக்குழு உறுப்பினர்கள் மா.கோவிந்தசாமி, ஸ்ரீதர் ஆகியோர் உடன் உள்ளனர்.