சி.வை.தாமோதரம்பிள்ளை பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டுப் பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்தமுதல்வர். தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி.1853 ஆம் ஆண்டு நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த தமிழ் நூலொன்றைப் பதிப்பித்ததன் மூலம் நூல் வெளியீட்டுத் துறையில் அவருக்கிருந்த ஆர்வம் வெளிப்பட்டதுமல்லாமல், ‘தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி’ எனும் பெருமையையும் பெற்றார். தமதுஅறுபத்து ஒன்பதாம் வயதில், 1901 சனவரி 1 இல்சென்னையில் புரசைவாக்கம் பகுதியில் தாமோதரம்பிள்ளை மறைந்தார்.சி. வை. தாமோதரனாரின் உருவச்சிலை ஒன்று அவர்படித்த கோப்பாய் கிறித்தவக் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளது.
====பெரணமல்லூர் சேகரன்===