tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

பேருந்தை நிறுத்தி பிறந்த நாள் விழா: வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி, பிப்.5-  வேப்பனப்பள்ளி அருகே அரசு நகரப் பேருந்தை மறித்து, சாலையின் நடுவே கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். யானைக்கால்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (28) என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து, நாச்சிகுப்பம் பிரிவு சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்து மேளதாளங்களுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட ஈஸ்வரராவ் என்பவரை அவர்கள் தாக்கியுள்ளனர். புகாரின் பேரில் வேப்ப னப்பள்ளி போலீசார் வழக்குப் பதிந்து, தலை மறைவாக உள்ளவர்களைத் தேடி வருகின்றனர். ஓசூரில் கால்நடைகளுக்கு  புதிய கோசாலை ஓசூர், பிப். 5-  ஓசூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை நிலைப் படுத்துவதற்காக 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கோசாலை அமைக்கப்படும் எனப் பொது சுகாதாரக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குழுத் தலைவர் என்.எஸ். மாதேஸ்வரன் தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆணையர் முகமது சபீர் ஆலம் முன்னிலை வகித்தார். பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கவும், முனீஸ்வர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதிய நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

ஓசூரில் கால்நடைகளுக்கு  புதிய கோசாலை

ஓசூர், பிப். 5-  ஓசூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை நிலைப் படுத்துவதற்காக 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கோசாலை அமைக்கப்படும் எனப் பொது சுகாதாரக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குழுத் தலைவர் என்.எஸ். மாதேஸ்வரன் தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆணையர் முகமது சபீர் ஆலம் முன்னிலை வகித்தார். பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கவும், முனீஸ்வர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதிய நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

200 கிலோ குட்கா  பறிமுதல்  இருவர் கைது

விழுப்புரம், பிப். 5- ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 200 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்குப் பயன் படுத்திய கார் ஆகியவற்றை விழுப்புரத்தில் போலீசார் பறிமுதல் செய்து, இரு வரை கைது செய்தனர். ஆந்திராவிலிருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வா ளர் கல்பனா, உதவி ஆய்வா ளர்கள் லியோ சார்லஸ் நவநீதகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் செஞ்சி ரோடு சந்திப்பு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த காரை மறித்துச் சோதனை செய்ததில், மூட்டை மூட்டை யாக குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து காரில் இருந்தவர்களைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், ராஜஸ்தான் மாநிலம், தாலோவுன் மாவட்டம், போர்வாடா கிராமத்தைச் சேர்ந்த அமரராம் என்பவ ரின் மகன் ஹர்ஷன் குமார் (26) மற்றும் ராஜஸ்தான் மாநிலம், ஜல்லூர் மாவட் டம், கரரா கிரா மத்தைச் சேர்ந்த சபீர் கான் என்ப வரின் மகன் உசேன் (29) என்பது தெரியவந்தது. சுமார் 200 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப் பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். இச்சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.