சென்னை:
ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராக கடந்த 5 ஆண்டுகளாக துடிப்புடன் செயல்பட்டு வந்த தோழர் ரமணி (எ) ரவீந்திரன் (42) புதனன்று சாலை விபத்தில் படுகாயமடைந்து மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்துசங்கத்தின் மாநிலத் தலைவர்கள் ஏ.லாசர், வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பல்வேறு இயக்கப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர் ரமணி அவர்கள் பெரிய மோளப்பாளையம் பகுதியில் குடிநீர், சாலைவசதி மற்றும் உள்ளூர் கோரிக்கைகளுக்காக ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்துமனுக் கொடுத்து பேசிவிட்டு திரும்பும்போதே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ரமணியின் தாத்தா, தந்தை, மகன் என மூன்றாவது தலைமுறையாக பொதுவுடைமை இயக்கத்தில் தொடர்ந்துஇயங்கும் குடும்பத்தில் நேர்ந்துள்ளதோழர் ரமணியின் மறைவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவித்துள்ள தலைவர்கள், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.