சென்னை:
தமிழ்நாடு அரசின் வருவாய் இழப்பிற் கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட 120 பக்க “வெள்ளை அறிக்கையை” வரும் 9 ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நிதிமேலாண்மை மிக மோசமானது. கடன் சுமை பல்லாயிரம் கோடியாக உயர்ந்துள் ளது. இந்த நிலையில், ஆட்சிக்கு வந்துள்ள திமுக, முந்தைய ஆட்சியின் நிதி மேலாண்மை, வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கை 2021-22 ஆம் ஆண்டிற் கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக வெள்ளை அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந் தார். நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் அதனை உறுதிப்படுத்தினார்.இந்த நிலையில், ஆக.13 அன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு முன்பாகவே, ஆக.9 அன்று 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையில் கடன் விவரங்கள், குடிநீர், மின்வாரியம், போக்குவரத்து துறையின் வரவு-செலவு, வருவாய் இழப்புக்கான காரணம் உள்ளிட்டவை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.