, நவ.18- மொழிப் பெயர்பாளரும், பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாசிரியருமான ப.கு. ராஜனின் தாயார் மங்கை யர்கரசி பன்னீர்செல்வம் திங்களன்று (நவ. 18) உடல் நலக்குறைவால் கால மானார். அவருக்கு வயது 84. அன்னாரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு ள்ளது. பெரம்பூர் வடிவேல் பிரதானசாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பி னர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமகிருஷ்ணன், இரா.முரளி, திருவேட்டை உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தினர். செவ்வாயன்று காலை 10மணி அளவில் பெரம்பூர் மின்மயானத்தில் அன்னா ரின் இறுதி நிகழ்ச்சி நடை பெறுகிறது.