tamilnadu

img

ராமச்சந்திர வைத்யநாத் தாயார் காலமானார்

சென்னை,நவ.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும் எழுத்தாளருமான ராமச்சந்திர வைத்யநாத் தயார் நாகலட்சுமி சென்னை யில் ஞாயிறன்று கால மானார்.அவருக்கு வயது 86. வயது மூப்பின் காரண மாக காலமான அவரது உடல் எந்தவித சடங்கு மின்றி போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக த்திற்கு தானமாக வழங்கப்பட்டது. முன்னதாக  வில்லிவாக்கத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த நாகலட்சுமி உடலுக்கு  டிஆர்இயு மூத்த தலைவர் ஆர்.இளங்கோவன் சிபிஎம் வில்லிவாக்கம் பகுதி செய லாளர் மதியழகன், தமுகஎச நிர்வாகி மணிநாத்,ஹேமா உள்பட ஏராளமான தோழர்க ளும் உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர்.