tamilnadu

img

விருது பெற்ற யெஸ்.பாலபாரதிக்கு  முதல்வர் வாழ்த்து....

சென்னை:
‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான யெஸ்.பாலபாரதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற புதினப் படைப்புக்காக, தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதைப் பெற்றிருக்கும் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதியை நெஞ்சார வாழ்த்துகிறேன். மேலும் பல படைப்புகளைத் தமிழுக்கு வழங்கி புதிய உயரங்களைத் தொடட்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.