tamilnadu

img

மக்கள் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக செயல்பட்டவர் தோழர் ஆர்.கே.தண்டியப்பன் சிபிஎம் மாநிலச் செயற்குழு புகழஞ்சலி

சென்னை,அக்.6 - கட்சி நடத்திய போராட்டங் களுக்கு  உந்து சக்தியாக செயல் பட்டவர் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தோழர் ஆர்.கே. தண்டியப்பன் என்று அவரது மறை விற்கு சிபிஎம் மாநில செயற்குழு புகழஞ்சலி செலுத்தியுள்ளது.

கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவ கங்கை மாவட்ட செயலாளர் தோழர் ஆர்.கே.தண்டியப்பன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது இதயப்பூர்வமான அஞ்சலியை உரித்தாக்குகிறது.

தோழர் ஆர்.கே தண்டியப்பன் மதுரை சட்டக் கல்லூரியில்  பயின்ற காலத்திலேயே இடதுசாரி மாணவர் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டவர். மாணவர் இயக்கத்தில் தீவிரமாக  பணியாற்றியவர். 1977-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டவர். தனது அளப்பரிய பணியின் காரணமாக கட்சியின் மாவட்ட செயலாள ராக உயர்ந்தவர். திருப்புவனம் பகுதியில் கட்சியின் ஆரம்பகால தலைவராக அறி யப்பட்டவர். அடித்தட்டு கிராமப்புற விவசாயி கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மத்தி யில் கட்சி மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதியாக அரும்பாடுபட்டவர்.

ஒன்றுபட்ட முகவை மாவட்டத்தில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக செயல்பட்டு  கட்சியை வளர்ப்பதற்கு அரும் பாடுபட்டவர். முகவை மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம்,  விவசாயத் தொழி லாளர் சங்கம், கரும்பு விவசாயி கள் சங்கம் ஆகிய அமைப்பு களின் பிரதான மாவட்ட நிர்வாகி யாகத் திறம்படசெயல்பட்டவர். 45 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு உரியவர்.

கோகோ கோலா நிறுவனம் சிவகங்கை மாவட்டம் பட மாத்தூரில் நிலத்தடி நீரை உறிஞ்சு வதை எதிர்த்த போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தியவர். திருபுவனம் பூவந்தி பகுதியில் பல்வேறு அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் மீறி மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த கட்சி நடத்திய போராட்டங்களுக்கு உந்து  சக்தியாக செயல்பட்டவர். மாவட்டத்தில் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை நிறை வேற்றிட மக்களோடு மக்களாக இருந்து போராட்டங்களை நடத்தியவர். பாப்பான் குளம், அரசனூர் பகுதியில் பட்டியலின மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைகளை  எதிர்த்த போராட்டத்தில் தீரமுடன் முன்நின்ற வர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவராகவும் செயலாற்றியவர். கட்சி தோழர்களால் மட்டுமல்லாமல் பொது மக்களாலும் ஆர்.கே.டி என்று அன்போடு அழைக்கப்பட்டவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உழைப்பாளி மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரது உடல் அவரது விருப்பத்தின்படியே சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ ஆராய்ச்சிக்காக அக்டோபர் 7 அன்று  வழங்கப்பட உள்ளது.

தோழர் ஆர்.கே. தண்டியப்பன் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கட்சி தோழர்களுக்கும் சிபிஐ (எம்) மாநில செயற்குழு தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.