எல்லாத்துக்கும் நாங்க தான் கஷ்டபடனுமா...? நூல் வெளியீடு
சிபிஎம் மத்தியசென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா எழுதி பாரதி புத்தகாலயம் பதித்துள்ள ‘எல்லாத்துக்கும் நாங்க தான் கஷ்டபடனுமா...?’ நூல் வெளியீட்டு விழா புதனன்று (பிப்.4) தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இந்நூலை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட சிஐடியு மத்தியசென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே.முருகேஷ் பெற்றுக்கொண்டார்.இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி தலைமை தாங்கினார். பாரதி புத்தகாலயம் மேலாளர் க.நாகராஜ் வரவேற்றார். கட்சியின் மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் உடனிருந்தார், பொறியாளர் மு.ராமநாதன், கவிஞர் யுகபாரதி, எழுத்தாளர் தீபலட்சுமி வாழ்த்தி பேசினர். நூலாசிரியர் ஜி.செல்வா ஏற்புரையாற்றினார். மாலதி (பாரதி புத்தகாலயம்) நன்றி கூறினார்.
