tamilnadu

img

சமையல் உதவியாளர் நியமனம் - மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு!

சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்கள் நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சத்துணவு மையங்களில் 8,997 சமையல் உதவியாளர்கள் நியமனத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு அறிவித்துள்ளது. மாதம் ரூ.3,000 தொகுப்பூதியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து கடந்தாண்டு வெளியிடட்ட அரசாணையில் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.