சென்னை,மார்ச்.16- பிரபல எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான இரா. நாறும்பூநாதன்(64) உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவர் தமிழில் 12க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் மேலும் தமிழ்நாடு அரசின் உ.வே.சா விருது பெற்றவராவார். இவரது மறைவிற்கு சு.வெங்கடேசன் எம்.பி உட்பட பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
பொருநை ஆற்றங்கரையின் பொக்கிஷம் மறைந்தது. நெல்லை மண்ணின் நீர்-நிலம்-மனிதர்களைக் கண் முன்னே விரித்துக்காட்டிய எழுத்துக்காரர்.
சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் காத்திரமாகச் செயல்பட்ட செயல்பாட்டாளர். தமுஎகச வின் தனித்துவமிக்க ஆளுமை. இடதுசாரி இயக்கத்தின் தீரமிக்க தோழர் நாறும்பூநாதனுக்கு என் வீரவணக்கம். என சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தனது இரங்களாஇ தெரிவித்துள்ளார்.