world

img

காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 150 பேர் பலி

போர் நிறுத்த அறிவிப்புக்கு பின் காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் மிகக்கொடிய யுத்தம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஜனவரி 19-ஆம் தேதி காசா-இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை மீறி காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நேற்று மீண்டும் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், பத்திரிகையாளர்கள் உட்பட 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து, போர் நிறுத்த அறிவிப்புக்கு பின் காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கடந்த இரு வாரங்களில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் காசா ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.