tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று... ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் குணமடைந்தனர்... 

சென்னை 
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.  கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 4 ஆயிரத்துக்கு மேல் இருப்பது மக்களிடையே சற்று பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் கடந்த ஒருவார காலமாக கொரோனா பரவல் மந்தமாக இருந்த நிலையில், இன்று (புதன்) பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 4,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்னர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 2,167 ஆக அதிகரித்துள்ளது. தமிழக கொரோனா பரவல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 5000 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை  (1,02, 310) கடந்துள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட நிலவரம் - சென்னையில் மீண்டும் உயரும் பாதிப்பு...  
தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 80,953 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்து மதுரையில் 341 பேருக்கும், திருவள்ளூரில் 278 பேருக்கும், தூத்துக்குடியில் 269 பேருக்கும், செங்கல்பட்டில் 186 பேருக்கும், விருதுநகரில் 175 பேருக்கும், நெல்லையில் 164 பேருக்கும்,  காஞ்சிபுரத்தில் 163 பேருக்கும், கன்னியாகுமரியில் 135 பேருக்கும், திருவண்ணாமலையில் 124 பேருக்கும், ராமநாதபுரம், திண்டுக்கல்லில் தலா 119 பேருக்கும், கோவையில் 104 பேருக்கும், சிவகங்கையில் 100 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100-க்குள் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.