மும்பை
நாட்டின் கொரோனா மையமாக உள்ள மகாராஷ்டிராவில் இதுவரை 6.72 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,995 பேர் பலியாகியுள்ள நிலையில், 4.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
குறிப்பாக கொரோனாவிலிருந்து பொதுமக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் போலீசார்கள் அதிகளவு பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். தினமும் 100-க்கும் மேற்பட்ட போலீசார்கள் புதிய நோயாளிகளாக மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 120 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த போலீசார்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 13,716 ஆக உயர்ந்துள்ளது. திங்களன்று மேலும் ஒரு போலீசார் கொரோனாவுக்கு பலியாகிய நிலையில், இதுவரை 139 போலீசார்கள் உயிரிழந்துள்ளனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில், இன்னும் 2,528 போலீசார்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை மாநகர போலீசார்கள் தான் அதிகளவு கொரோனா பாதிப்பைச் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.