வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவையொட்டி தெற்கு ரயில்வே சார்பில் 3 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் (06061) ஆகஸ்ட் 27, செப்டம்பர் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர விரைவு ரயில் (06062) ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு எர்ணாகுளத்தைச் சென்றடையும்.