states

img

கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஊர்வலம் - மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு!

ஐதராபாத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஊர்வலத்தின்போது, மின்கம்பிகள் மீது தேர் மோதியதில் மின்சாரம் தாக்கி கிருஷ்ணா (21), சுரேஷ்(34), ஸ்ரீகாந்த்(35), ருத்ரவிகாஸ்(39), ராஜேந்திரரெட்டிரு45) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.