tamilnadu

img

சில நிமிடங்களிலேயே ரயில் முன்பதிவு நிறைவு!

தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் விற்று தீர்ந்தது.

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும்  ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. அதில், ஆக்டோபர் 17-ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு, காலை 8 மணிக்கு தொடங்கி சில நிமிடங்களிலேயே நிறைவடைந்தது.

குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றதால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.