சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததுள்ளது.
கடந்த 2006 முதல் 2010 காலகட்டத்தில் ரூ.2 கோடி 1 லட்சம் ரூபாய் மதிப்பில் வருமானத்தைவிட அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் தொடங்கி 6 மாதங்களில் விசாரணை முடிக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஐ. பெரியசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.