tamilnadu

img

வேலை பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை பாதுகாக்க தனிச்சட்டம்

வேலை பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை பாதுகாக்க தனிச்சட்டம்

சேலம், ஆக 17- வேலை பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை பாதுகாக்க தமிழக  அரசு தனிச்சட்டம் இயற்ற வேண் டும் என சுமைப்பணி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிஐடியு சேலம் ஜில்லா சுமை தூக்கும் தொழிலாளர் சங்க ஆண்டு  பேரவை, புதிய பேருந்து நிலையம்  அருகே உள்ள வி.பி.சிந்தன் நினை வகத்தில் ஞாயிறன்று நடைபெற் றது. சங்கத்தின் தலைவர் பி.ஆறு முகம் தலைமை வகித்தார். உதவிச் செயலாளர் தண்டபாணி அஞ்சலி  தீர்மானத்தை வாசித்தார். பால கிருஷ்ணன் வரவேற்றார். சிஐடியு  மாவட்டப் பொருளாளர் வி. இளங்கோ துவக்கவுரையாற்றி னார். பொதுச்செயலாளர் எ. கோவிந்தன், பொருளாளர் இ.செல் வகுமார் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். இக்கூட்டத் தில், சுமைப்பணி தொழிலாளர்க ளுக்கு வேலை பாதுகாப்பு உள் ளிட்ட உரிமைகளை பாதுகாக்க, தமிழக அரசே தனிச்சட்டம் இயற்ற  வேண்டும். சரக்கு பரிவர்த்தனை யில் இரண்டு சதவீதம் நல வரி விதிக்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரி யம் அமைக்க வேண்டும். உள் ளாட்சி அமைப்புகள் மூலம் கழி வறை, குளியலறையுடன் கூடிய  ஓய்வறை அமைத்துத்தர வேண் டும். மாவட்டத்தின் முக்கியமாக உள்ள ஜவ்வரிசி தொழிலை பாது காக்க வேண்டும். டாஸ்மார்க் குடோன் சுமைப்பணி தொழிலாளர் களின் ஏற்றுக் கூலி தமிழ்நாடு முழு வதும் ஒரே மாதிரியாக நிர்ணயம்  செய்ய வேண்டும், உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் சேலம் தலைவராக பி.ஆறுமுகம், பொதுச்செயலாளராக ஏ.கோவிந் தன், பொருளாளராக எம்.மாய  கண்ணன் மற்றும் 5 துணைத்தலை வர்கள், 5 துணைச்செயலாளர்கள் உட்பட 20 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. சம்மே ளன பொதுச்செயலாளர் ஆர். வெங்கடபதி நிறைவுரையாற்றி னார். மாவட்ட உதவிச்செயலாளர் எஸ்.பிரபு நன்றி கூறினார்.