tamilnadu

img

தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்கிடுக

தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்கிடுக

கட்டுமானத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

நாமக்கல், ஆக.17- தீபாவளி பண்டிகைக்கு போனஸ்  வழங்க வேண்டும் என சிஐடியு கட்டு மானத் தொழிலாளர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. சிஐடியு கட்டிட கட்டுமானத் தொழி லாளர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட  23 ஆவது மகாசபை கூட்டம் ஞாயி றன்று, திருச்செங்கோடு அருகே உள்ள எலச்சிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. சங்கத் தின் மாவட்டத் தலைவர் எம்.ராஜேந் திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் காளியப்பன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட துணைத்தலைவர் சர போஜன் வரவேற்றார். சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் சு. சுரேஷ் துவக்கவுரையாற்றினார். கட் டுமான தொழிலாளர் சம்மேளன மாநில துணைச்செயலாளர் ராஜா முகமது சிறப்புரையாற்றினார். பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழ்மணி, சிஐ டியு மாவட்டக்குழு உறுப்பினர் ராயப் பன், நிர்வாகிகள் ரமேஷ், தேவராஜ்  உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  இக்கூட்டத்தில், நலவாரியத்தின் மூலம் கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டி கைக்கு போனஸ் வழங்க வேண்டும். வாடகை வீட்டில் வசித்து வரும் கட் டுமானத் தொழிலாளர்களுக்கு இல வச வீட்டு நிலம் வழங்க வேண்டும்.  நலவாரியத்தில் பெண் தொழிலா ளர்களின் ஓய்வூதிய வயது 55 ஆக வும், ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் வீடு கட்டும் திட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம்  வழங்க வேண்டும். கட்டுமானத்  தொழிலாளர்களுக்கு இருசக்கர  வாகனம் வாங்க மானியம் வழங்க  வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, சங்கத்தின் மாவட் டத் தலைவராக எம்.அசோகன், செய லாளராக கு.சிவராஜ், பொருளாள ராக எம்.ராஜேந்திரன், உதவித்தலை வர்களாக காளியப்பன், தனசேக ரன், ஜெயமணி, உதவிச்செயலாளர் களாக கண்ணன், துரைசாமி உட்பட 17 மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி நிறைவுரையாற்றினார். முடிவில், விஜய் நன்றி கூறினார்.