tamilnadu

img

சூலூரில் விமானப் படை தளபதி ஆய்வு

கோவை, மே 19-இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி பீரேந்திர சிங் தனோவா, கோவையை அடுத்த சூலூர் விமானப் படைத்தளத்தை நேரில் பார்வையிட்டு அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தேஜாஸ் விமானங் களை ஆய்வு செய்த அவர் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் மிக்21 ரக விமானத்தையும் ஓட்டிப் பார்த்தார். அவர் ஓட்டிய விமானம் 45 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ரஷ்யாவிடமிருந்து வாங்கப் பட்டது.விமானிகளுக்கு ஊக்கம் அளிக்க உயரதிகாரிகள் இப்படி செய்வது வழக்கம் தான் என்றாலும் அண்மையில் பாகிஸ்தானில் இருந்து வந்த எப்.16 போர் விமானத்தை அபிநந்தன் மிக் ரக விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியதை அடுத்து இந்த ஆய்வு முக்கியத்துவம் பெற்றுள் ளது.கார்கில் யுத்தத்தின் போது தனோவா மிக் விமானத்தில் சுமார் 2 ஆயிரம் மணி நேரம் வரை பறந்து , எதிரிகளுடன் போரிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.