tamilnadu

img

மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி 15 லட்சம் பேர் குவிந்தனர் நெரிசலில் சிக்கி 4 பேர் பலி; 230 பேர் மயக்கம்

சென்னை,அக்.6- சென்னை மெரினா கடற்கரை யில் நடைபெற்ற விமான சாக சத்தைக் காண குவிந்த கூட்ட  நெரிசலில் சிக்கி 4 பேர் பலியா கினர். 230 பேர் மயக்கமடைந்தனர்.

இந்திய நாட்டின் விமானப் படை தொடங்கி 72 ஆண்டுகள் நிறை வடைந்துள்ளது. இதை கொண்டா டும் வகையில் ஆண்டுதோறும் அக் டோபர் 8 ஆம் தேதி விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.6) பிரம்மாண்ட விமானப்படை சாகச நிகழ்ச்சியை அரங்கேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது, 

இந்த விமானப்படை விமானங் களின் சாகச நிகழ்ச்சிகள் நடை பெற்றது.  அதிக எடைகளை ஏந்திச்  செல்லக் கூடிய ரபேல் போர் விமானம், கார்கில் போரில் பயன் படுத்திய விமானங்களின் அணி வகுப்புகள் நடைபெற்றன. இத னைக் காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். விமான சாகச  நிகழ்ச்சிகளால் மெரினா கடற் கரையே தீப்பிழம்பாக மாறியது.

15லட்சம் பேர்

அக்டோபர் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்குத் துவங்கிய சாகச நிகழ்ச்சி பிற்பகல் 1 மணிக்கு நிறை வடைந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்கு 15 லட்சத்திற்கு அதிக மானோர் வரக்கூடும் என முன்பே  கணிக்கப்பட்டிருந்தது. அதன் படியே 15 லட்சத்திற்கும் அதிக மானோர் பங்கேற்றனர். இதன் மூலம், விமான சாகச நிகழ்ச்சி லிம்கா சாதனை புத்தகத்தில் ‘உலகிலேயே அதிக நபர்கள் கண்டுகளித்த போர் விமான சாகச நிகழ்ச்சி’ என்ற சாதனை படைத்து இடம் பெற்றது.

விடுமுறை தினம் என்பதால், விமான நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசிப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மக்கள் தங்கள் குழந்தைகள், வீட்டில் உள்ள முதி யவர்களுடன் மெரினாவிற்கு திரண்டனர். இதனால் கூட்டம் அதி களவில் இருந்தது. மெரினா கடற் கரை மக்கள் கூட்டத்தால் திக்கு முக்காடியது. கூட்ட நெரிசலில் சிக்கிய நூற்றுக்கணக்கானோர் மயக் கடைந்தனர். தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மற்றும் ஊழி யர்கள்,அவர்களை வாகனத்தில் ஏற்றி சென்று அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், வெயிலின் தாக்கமும் இருந்ததால், சாகச நிகழ்ச்சியை காணவந்த மேலும் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. அப்படி மயக்கம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்து வமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், சென்னை கொருக்குப் பேட்டையைச் சேர்ந்த ஜான் (60) சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரி ழந்தார். அதேபோல், திருவொற் றியூரைச் சேர்ந்த கார்த்திகேயனும் (34) மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  பலியானார். மேலும் இருவரும் பலி யாகியுள்ளார். சாகச நிகழ்ச்சியைக் காண வந்தோர் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.