தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக, 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை ஆக.14 அன்று சட்டமன்றப் பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்ற முக்கிய திட்டங்கள் மற்றும் முக்கிய கொள்கை முடிவுகள் பின்வருமாறு.
2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் சார்புத்துறை களுக்கு என்று ரூ.34,220.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் “கலை ஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்”அறிமுகம்.
நடப்பாண்டில் 2500 கிராமங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிப் பரப்பை உயர்த்தி, விவசாயிகளின் வருமானம் உயர்த்த ரூ.250 கோடி ஒதுக்கீடு.
ஒன்றிய, மாநில அரசுத் திட்டங்களை ஒன்றிணைத்து மொத்தம் ரூ.1,245.45 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
****************
நெல், கரும்பு கொள்முதல் விலை
நெல் கொள்முதல் விலை சாதாரண ரகம் குவிண்டாலுக்கு ரூ.2,015, சன்ன ரகம் ரூ.2,060 என உயர்த்தி வழங்கப்படும்.
சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுப்பண்ணையத்திற்காக ரூ. 119.402 கோடி ஒதுக்கீடு.
கரும்பு உற்பத்திக்கான ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ42.50, கூடுதல் “சிறப்பு ஊக்கத்தொகையாக” டன் ஒன்றுக்கு ரூ.150 வழங்கப்படும்.
****************
இலவச மின்சாரம்
விவசாயிகளின் பம்ப்செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்வாரியத்திற்கு ரூ. 4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு.
பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகளின் சார்பாக, மாநில அரசின் பங்காக ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு,
நுண்ணீர் பாசனத்திட்டத்தின்கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம்.
இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் தொடர்ந்து மானியம் வழங்கி 1,50,000 எக்டரில் செயல்படுத்திட ரூ. 982.48 கோடி நிதி ஒதுக்கீடு.
7.5 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் 3 லட்சம் விவசாயி கள் பலன்பெறும் வகையில், ரூ,146.64 கோடி நிதி ஒதுக்கீடு.
ரூ.140 கோடி மானியத்தில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம்.
சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ், 70 சதவிகித மானியத்தில் 5,000 விவசாயிகள் பயன்பெறுவதற்கு ரூ.114.68 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் வேளாண் கல்வியை வலுப்படுத்துவதற்கு ரூ. 573.24 கோடி.
****************
இயற்கை வேளாண்மை
வேளாண்மைக்கான துறை ‘நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ என பெயர் மாற்றம்.
மண் வளத்தை பாதுகாத்து, இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ரூ.33.03 கோடியில் செயல்படுத்தப்படும்.
பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்படும்.
வேளாண்மை பட்டதாரிகள், இதர இளைஞர்கள் வேளாண்மை பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க திறன் மேம்பாட்டு பயிற்சி.
பனை தொடர்பான பல்வேறு தொழில்களை ஊக்குவிக்க, ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டுத் திட்டம்.
தேவையில்லாமல் பனை மரத்தை வெட்டும் நடைமுறை நெறிமுறைப்படுத்தப்படும்.
நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக் கள், தென்னை, பருத்தி, பழங்கள் போன்ற பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், உற்பத்தியை உயர்த்தவும் மொத்தமாக ரூ.300.56 கோடி ஒதுக்கீடு.
****************
அருங்காட்சியகம்
வேளாண்மையின் மகத்துவத்தை இளைஞர்கள் அறிந்து கொள்ள சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம்.
இயற்கை வேளாண்மை, ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாநில அளவிலான பரிசு.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, திப்பிலி, கற்றாழை, புதினா போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் அடங்கிய இரண்டு லட்சம் ஊட்டச்சத்துத் தழைகள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.2.18 கோடி நிதி ஒதுக்கீடு.
திருவள்ளூர், கடலூர், நாமக்கல், தென்காசியில் தோட்டக்கலை பயிர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்த ரூ.12.50 கோடி
கடலூர் மாவட்டத்தில் பலாவிற்கான சிறப்பு மையம். வடலூரில் புதியதாக அரசு தோட்டக்கலை பூங்கா.
மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதியமின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க, ரூ.10,000 மானியம்.
புதிதாக 10 உழவர் சந்தைகளை உருவாக்க ரூ. 6 கோடி ஒதுக்கீடு.
40 வேளாண் விளைபொருட்களுக்கு ஒரே சீராக உறுதி அறிவிக்கை.
ஒட்டன்சத்திரம், பண்ருட்டியில் ரூ. 10 கோடியில் குளிர்பதனக் கிடங்குகள்.
நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை பகுதியில் பழங்குடியின ரால் உற்பத்தி செய்யப்படும் மிளகை பதப்படுத்த மையம்.
நீலகிரியில் ரூ.2 கோடியிபில் ‘ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம்’
****************
முருங்கை ஏற்றுமதி மண்டலம்
தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி ‘முருங்கை ஏற்றுமதி மண்டலம்’
சென்னை கொளத்தூரில் நவீன விற்பனை மையம்.
****************
புவிசார் குறியீடு-தொழில் மையங்கள்
கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மண்ணச்ச நல்லூர் பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை உணவுப் பதப்படுத்துதலுக்கென தனி அமைப்பு.
மீன் பதப்படுத்துதலுக்கு நாகை, தேங்காய்க்கு கோவை, வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறு தானியங்களுக்கு விருதுநகர் என ஐந்து தொழில்கற்கும் மையங்கள் தொடங்க நடவடிக்கை.
புதிதாக கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைக் கல்லூரி.
தமிழ் வழி பயிலும் மாணவர்களில் வசதிக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம்
திருச்சி-நாகை மாவட்டத்திற்கு இடையேயான பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடம்.