சென்னை:
அதிமுகவின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் வெளியிட்ட அறிக்கையில்“அதிமுகவின் சார்பில் கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.