tamilnadu

img

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

2026ஆம் ஆண்டும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
குறிப்பாக இன்று நடைபெற்ற கூட்டத்தில்,

  • கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
  •  சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2000ல் இருந்து ரூ3,400 ஆகவும், தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.2000-ல் இருந்து ரூ.3000 ஆகவும் உயர்த்தப்படும்.
  • ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்போது பகுதி நேர ஆசியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.