அதானியை கைது செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் புதனன்று (நவ.27) சென்னை எம்ஜிஆர் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.