india

img

அதானியைப் பாதுகாக்கும் மோடி அரசு; மீண்டும் முடங்கியது நாடாளுமன்றம்!

புதுதில்லி, நவ. 27 - அதானி விவகாரத்தில், மோடி அரசு  காட்டிவரும் பிடிவாதம் காரணமாக புதன்கிழமையன்றும் நாடாளுமன்றத் தின் இரு அவைகளும் முடங்கின.

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக, இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடியை லஞ்சமாக கொடுத்த தாகவும், இந்தப் பணமானது, அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட ரூ. 6,300 கோடியி லிருந்து வழங்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்கப் பங்கு பரிவர்த்தனை ஆணையம், நியூ யார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

முதல்நாளே முடங்கிய நாடாளுமன்றம்

இதன் பேரில் அதானி குழுமத் தலை வர் கவுதம் அதானி, அதானி க்ரீன் எனர்ஜி செயல் இயக்குநரும், கவுதம் அதானியின் மருமகனுமான சாகர்  அதானி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்  பதிவு செய்த நியூயார்க் நீதிமன்றம் கவுதம் அதானி, சாகர் அதானி ஆகியோ ருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மோடி அரசு தொடர்ந்து மறுத்து வரு கிறது. இதனால், நவம்பர் 25 அன்று குளிர் காலக் கூட்டத்தொடரின் முதல்நாளே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

மக்களவையில் அனுமதி மறுப்பு

இந்நிலையில், புதனன்று நாடாளுமன்றம் கூடியபோது, இரண்டு அவைகளிலும் மீண்டும் இந்தப் பிரச்சனைகளை எழுப்பி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விவாதத்திற்கு அனுமதி கோரினர். ஆனால், வழக்கம்போல மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி தரவில்லை. மாநி லங்களவையில் அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, சம்பல் பதற்றம் உள்பட பல்வேறு முக்கியப் பிரச்சனை களைக் குறிப்பிட்டு, 18 ஒத்திவைப்பு தீர்மானங்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அளித்திருந்தனர். 

சம்பல் மோதல் :  ஏ.ஏ.ரஹீம் நோட்டீஸ்

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த  ஹாஜி ஜூம்மா மசூதி சர்வேயின் போது ஏற்பட்ட மோதல் குறித்து நாடாளு மன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் எம்.பி. நோட்டீஸ் அளித்திருந்தார். “சம்பல் சம்பவம் நாட்டின் மதச்சார்பற்ற விழு மியங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது மட்டுமல்லாது வகுப்பு வாத வன்முறைக்கு வழி வகுத்த நிலையில், உ.பி. பாஜக அரசாங்க இயந்திரமோ மோதலை ஊக்குவித்து ள்ளது” என்று பிரச்சனையின் தீவி ரத்தை சுட்டிக்காட்டி, “அவை விதி 267-இன் கீழ், அவை நடவடிக்கையை நிறுத்தி, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று கூறி யிருந்தார். 

18 நோட்டீஸ்களும் தள்ளுபடி

ஆனால், அந்த 18 நோட்டீஸ்களை யும் மாநிலங்களவைத் தலைவர் ஜக தீப் தன்கர் ஒரேயடியாகத் தள்ளுபடி செய்தார். இதனால், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கடும் அமளி ஏற்பட்டது. அதானியைக் கைதுசெய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். இதனால், முதலில் 12 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்ட நாடாளு மன்றத்தின் இரு அவைகள், பின்னர் நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப் பட்டன.