articles

img

உழைப்புச் சுரண்டலின் பிடியில் ‘கிக்’ தொழிலாளர்கள்-கே.சி.கோபிகுமார்

1980களுக்குப் பிறகு ஏற்பட்ட தொழிற் புரட்சியின் காரணமாக உற்பத்தி முறைகள் மாற்றப்பட்டு, நவீன வேலை நிலைமைகள் தீவிரமாகப் புகுத்தப்பட்டு தொழிலாளர்கள் கடும் சுரண்டலுக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர். ஒன்றிய-மாநில அரசுகள் பன்னாட்டு  நிறுவனங்கள் தொழிற்சாலைகளைத் துவங்கும்போது இறையாண்மைக் கொள்கைகளைக் காவு கொடுத்து, சந்தைப் பொருளாதாரத்தைத் தழுவி அனைத்துக் கம்பெனி சட்டங்களையும் தளர்த்துகின்றன.

தொழில்நுட்பப் புரட்சியும் முதலாளித்துவ லாபவெறியும்

விஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சியை உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் செயல்பாடுகளில் பயன் படுத்துவதற்கு நாம் சாதகமாக உள்ளோம். ஆனால் அந்தப் புரட்சி தொழிலாளர்களை மையமாகக் கொண்டு, அவர்களது ஊதியம் மற்றும் பணி நிலைமை களை மேம்படுத்துவதற்காக அமைய வேண்டும். அவர்களது குடும்பத்துடன் செலவிட, கூடுதலான ஓய்வு நேரம் அளிக்க வேண்டும். ஆனால் ஏகபோக முதலாளிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் என்பது அவர்களது லாபங்களை உயர்த்துவதற்கான ஒரு வழி முறைதான் என உலகத் தொழிற்சங்க சம்மேள னத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.

கிக் தொழிலின் வளர்ச்சியும் தொழிலாளர் நெருக்கடியும்

ஆனால், காரல் மார்க்ஸ் கூறியது போன்று முதலா ளித்துவம் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள, தனது லாபத்தை பன்மடங்கு பெருக்கிக்கொள்ள தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்ட பல்வேறு முறைகளை கையாளும். அதில் ஒரு முறை தான் கிக் (செயலி வழி சேவைத் தொழில்கள்) பொரு ளாதாரம்.

இந்தியாவில் கிக் தொழில் என்பது 2015 முதல் இருந்து வருகிறது. கொரோனா தொற்றுநோய் ஊரடங்கு காலங்களின் போது பல பாரம்பரிய வேலைகள் சீர்குலைந்தன. மாற்று வேலை வாய்ப்பு களைத் தேட மக்களைத் தள்ளியது. இந்தியாவில் நிலவும் அதிதீவிர வேலையின்மையின் காரணமாக வும், வாழ்க்கையை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் என பல்வேறு காரணிகளாலும் நாட்டின் இளைஞர் கள் சமூகப் பாதுகாப்பற்ற கிக் தொழிலுக்குத் தள்ளப் படுகின்றனர்.

 டிஜிட்டல்மயமாக்கலும் இளைஞர்களின் நிலையும்

மேலும் இந்தியாவின் டிஜிட்டல்மயமாக்கல் என்பது ஸ்மார்ட்போன்களுக்கான தேவை, அதிகரித்த அணுகல், மலிவு விலையில் இணையம் மற்றும் சொமேட்டோ, உபர், ஸ்விக்கி மற்றும் ஓலா போன்ற தளங்களின் எழுச்சி ஆகியவை இளைஞர்களுக்கு இத்தொழிலில் மீது அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி யது.

கட்டற்ற சுரண்டலும் 
அரசின் பங்கும்

ஒன்றிய அரசின் நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாக்கம், நுகர்வு கலாச்சாரத் தாக்கம் போன்றவற்றால் இன்றைய தலைமுறையினர் பாரம்பரிய முழுநேர வாய்ப்புகளை விட, நெகிழ்வான மற்றும் சுயேச்சையான வேலைகளை விரும்புகின்றனர். இதுஒரு பக்கம் இருக்க, மறுபக்கத்தில் கூடுதல் வருமானம்,அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் காரணமாக, பலர், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட பிரிவுகளில் உள்ளவர்கள் கிக் வேலைகளை மேற்கொள்கின்றனர்.

ஆர்வலர்கள் இதைச் சுட்டிக்காட்டினாலும், உண்மையில் ஒன்றிய-மாநில அரசுகளின் கொள்கை களினால், குறிப்பாக அரசு மற்றும் பொதுத்துறைக ளில் பல லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப் பப்படாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளினால் இளைஞர்கள் இந்தத் தொழிலுக்குத் தள்ளப் படுகின்றனர்.

77 லட்சம் இளைஞர்கள்

உலகளவில் கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை யில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. 77 லட்சம் திறமையான இளைஞர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். 2030களில் இந்த எண்ணிக்கை 2.35 கோடி யாக அதிகரிக்கும்  என்று அரசு நிறுவனமான நிதி ஆயோக் தெரிவிக்கிறது.

 தொழிலாளர் உரிமை மறுப்பும் சமூக விளைவுகளும்

தொழில் துறைகளில் கிக் பொருளாதாரம் வேக மாகப் பரந்து விரிவடைந்து வருகிறது. உணவு விநி யோகம், மோட்டார் தொழில் மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக உற்பத்தித் துறை, சேவைத் துறைகளில் இதனை முதலாளித்துவம் பயன்படுத்து கிறது. கிக் தொழிலாளர்களுக்கு நியாயமான, பாது காப்பான வேலை நிலைமைகளை உறுதி செய்ய வேண்டியதில்லை என்று முதலாளிகள் கருதுகின்ற னர். அதையே ஒன்றிய-மாநில அரசுகளும் நடை முறைப்படுத்துகின்றன.

சட்டப் பாதுகாப்பின்மையும் தொழிலாளர் போராட்டங்களும்

இந்தியாவில் இந்தத் தொழிலாளர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு இல்லை. ஊதியப் பாகுபாடு, நியாயமற்ற பணிநீக்கம் தொடர்ந்து நடைமுறைப் படுத்தப்படுகிறது. பணியிடங்களில் துன்புறுத்தல்க ளுக்கு எதிராக முறையிட ஏற்பாடுகள் இல்லை. அணி திரட்டப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங் கள் இவர்களுக்குப் பொருந்தாது என்கின்றனர். ஏனெனில் இவர்கள் நிறுவனங்களின் பங்குதாரர்க ளாகச் செயல்படுகிறார்கள் என்று ஓலா, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் கூறுகின்றன.

மாநில அரசுகளின் நலவாரியங்களும் குறைபாடுகளும்

ஜூலை 24, 2023 அன்று, இந்தியாவில் முதன் முதலாக கிக் தொழிலாளர்களுக்கு ராஜஸ்தான் அரசு, செயலி மூலம் செயல்படும் கிக் தொழிலாளர்கள் (பதிவு மற்றும் நலன்) சட்டத்தை இயற்றியது. பின்னர்  ஜார்க்கண்ட், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் இந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வேலை யை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் அறிவித்தன.

கிக் தொழிலாளர்களின்  சமூக-பொருளாதாரச் சவால்கள்

கடுமையான வேலை நிலைமைகள் காரணமாக தொழிலாளர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படு கிறது. தேவையற்ற வேலை நேர நிலைமைகள் குறிப் பாக பத்து நிமிட டெலிவரி, ஃபர்ஸ்ட் மைல் என ஏரா ளமான கெடுபிடிகள், அதாவது பத்து நிமிடத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களின் மதிப்பீடு குறைக்கப்பட்டு அடுத்த நாள் வேலை என்பது கேள்விக்குறியாக மாறும்.

போராட்டப் பாதை

நவீன தாராளமயக் கொள்கைகளை முழுமையாக அமலாக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏதுவாகத் தொழிலாளர் சட்டங்களை மாற்றி, போராடிப் பெற்ற உரிமைகளை மறுத்து, ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தை அடிமைகளாக மாற்றும் முதலாளித்துவக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போராட்ட இயக்கங்களை மிகத் தீவிரமாக நடத்திட வேண்டிய கட்டாயத்தில் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் சட்டங்களும் உரிமை மறுப்பும்
2020-ல் ஒன்றிய அரசு, ‘அமைப்புசாரா தொழிலாளர்கள், கிக் தொழிலாளர்கள் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு’ சட்டத்தை எந்த விவாதமுமின்றி நிறைவேற்றியது. இருப்பினும், சட்ட விதிகள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம், தொழில் தகராறு சட்டம், இ.எஸ்.ஐ சட்டம், பி.எஃப் சட்டம், மகப்பேறு பலன் சட்டம், பணிக்கொடைச் சட்டம் போன்ற எந்த முக்கிய தொழிலாளர் நலச் சட்டங்களும் இவர்களுக்குப் பொருந்தாது என நிறுவனங்கள் கூறுகின்றன.
தொழிலாளர் எதிர்ப்பும் சிஐடியு-வின் போராட்டமும் 
சிஐடியு தொழிற்சங்கம், இத்தொழிலில் முதலாளி-தொழிலாளி உறவு இருப்பதற்கான பல்வேறு சான்றுகளை தமிழக
அரசிடம் வழங்கியது. எனினும், ஸ்விக்கி-சொமேட்டோ போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு,
அரசு 2024 ஜனவரி 1 முதல் நலவாரிய அமைப்பை ஏற்படுத்தியது. இதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சனைகள்
K எந்த காரணமுமின்றி பணிநீக்கம் (ஐடி தடை)
K போக்குவரத்துப் படி ரத்து
K பணிக்கொடை, போனஸ், ஓய்வூதிய மறுப்பு
K குறைதீர்க்கும் வழிமுறைகள் இன்மை
K மகப்பேறு விடுப்பு மறுப்பு
K பாலியல் புகார் கமிட்டி இல்லாமை
K நிர்வாகத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தை இல்லாமை

கட்டுரையாளர் :  சிஐடியு மாநிலச் செயலாளர்