headlines

img

சிறு குறு தொழில்களின் குரல் வளையை நெரிப்பதா?

வணிகப் பயன்பாட்டுக் கட்டிடங்களின் வாட கைக்கு ஒன்றிய அரசு  18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்திருக்கிறது. இது ஏற்கனவே நெருக்கடியிலி ருந்து  மீளமுடியாத நிலையில் சிக்கித் தவிக்கும்  சிறு,குறு, நடுத்தரத் தொழில்களின் குரல்வளையை நெரிக்கும் செயலாகவே அமையும்.   

ஏற்கனவே மூலப்பொருட்களின் விலையேற் றம், ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம், கொரோனா தொற்று, மின்கட்டண உயர்வு எனத் தொடர் நெருக்கடியால் பலர் தொழிலை விட்டு வெளி யேறி விட்டனர். தற்போதும் பல நிறுவனங்கள் நெருக்கடியை எதிர் கொள்ளமுடியாமல் மூச்சுத் திணறுகின்றன. இதனை  அரசு உடனடியாக  மீட்டெடுப்பதற்குப் பதிலாக, மேலும் சுமையை ஏற்றியிருப்பது  தொழில் உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. 

தமிழகம் முழுவதும் 47 லட்சத்திற்கு மேற் பட்ட சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங் கள் வாடகை கட்டிடத்தில்தான் இயங்கி வருகின் றன. இவர்களின் ஆண்டு வர்த்தகம் பெரும்பா லும் ரூ.1.5 கோடிக்குக் கீழ் இருப்பதால் ஐடிசியில் திரும்பப்பெறும் வாய்ப்பும் இல்லை. இதனால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கடும் நெருக்கடி யைச் சந்திக்கும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மேலும் வரிச்சலுகைகளையும், மானியங்களை யும் வழங்கி அதன் மூலம் பொருளாதாரத்தை வளர்க்கப் போவதாக மோடி அரசு கூறுகிறது. இது கார்ப்பரேட்களின்  ஏகபோகத்திற்காக சிறு, குறு, நடுத்தரத் தொழில்களைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும். 

அதுமட்டுமல்ல,  ஒன்றிய  அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் அதிகம் பாதிக்கப்படுவது கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவிகித ஏழை மக்கள்தான். காரணம் இவர்கள்தான்  மொத்த ஜிஎஸ்டி வசூலில் 66 சதவிகி தத்தைச் செலுத்துகின்றனர்.  ஏற்கெனவே இருக் கும் பணவீக்க உயர்வின் காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்தி ருக்கிறது. ஆனால் அதற்கேற்ற வருமான  உயர்வு இல்லை.  இதனால் மக்களிடம்  வாங்கும் சக்தியும் கடுமையாகக் குறைந்திருக்கிறது. 

இதன் எதிரொலியாகச்  சந்தையில் பொருட் களுக்கான கிராக்கி குறைகிறது. தேவை குறையும் போது உற்பத்தியும் குறைகிறது. இதனால் வேலை யின்மையும் அதிகரித்து வருகிறது.  பணவீக்கம் 4 சதவிகிதமாக இருப்பதைத்தான் மக்கள் தாங்கக் கூடிய அளவாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. ஆனால் கடந்த 101 மாதங்களில்  72 மாதங்களில் பணவீக்க விகிதம் 4 சதவிகிதத்திற்கும் அதிகமாகவே இருந்திருக்கிறது. அதில் 29 மாதங்களில் 6 சத விகிதத்திற்கு அதிகமாகச் சென்றிருக்கிறது. இதி லிருந்தே மக்கள் விலைவாசி உயர்வால் எந்தள விற்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் எதிரானதல்ல, ஒட்டு மொத்த மக்கள் நலனுக்கும் எதிரானது.