சென்னை,செப்.20- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 15 பேரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கச் சென்னை காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 20க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை, காங். முன்னாள் நிர்வாகி அசுவத்தாமன், செய்யப்பட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி மலர்கொடி, பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உள்ளிட்ட 15 நபர்கள் சிறையில் குண்டாஸில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.