விருதுநகர், நவ. 9 - தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மாவட்டந்தோறும் பயணம் செய்து, அரசு நலத் திட்ட பணிகளை கள ஆய்வு செய்யும் பணியைத் துவங்கியுள்ளார். கோவை மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பய ணம் செய்து, கள ஆய்வு மேற்கொண்ட முதல்வர், அடுத்த மாவட்டமாக சனிக்கிழமை யன்று (நவ.9) விருதுநகர் மாவட்டத்தில் கள ஆய்வைத் துவங்கினார்.
எல்லையில் உற்சாக வரவேற்பு
இதற்காக இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமையன்று விருதுநகர் வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை - விருதுநகர் மாவட்ட எல்லையான சத்திரரெட்டியபட்டியில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலின் சாலை யில் சிறிது தூரம் நடந்து சென்று, பொதுமக்க ளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பட்டாசு தொழிற்சாலையில் ஆய்வு பின்னர், விருதுநகரில் உள்ள மதன் பட் டாசு தொழிற்சாலையைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட முதல்வர், கன்னிசேரி புதூர், மேலச்சின்னையாபுரத்தில் உள்ள மதன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையை யும் பார்வையிட்டார். இங்கு பட்டாசு தொழிற்சாலைக்கான உரி மச் சான்று, பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயனப் பொருள் வைப்பறை, தயாரிக் கப்படும் இடங்கள், பட்டாசுகள் வைப்பறை, மைக்ரோ கார்டு திரி வைப்பறை போன்ற இடங்களை ஆய்வு செய்த முதல்வர், அங்கு பணியிலிருந்த தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார்.
பெண்களிடம் கலந்துரையாடல்
அப்போது, இசக்கியம்மாள், திருமுருகன் ஆகிய தொழிலாளர்கள், “விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைசெய்து வரு கின்றனர். ஆலைகளில் எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்தில் உயிரி ழப்புகள் ஏற்படுகின்றன. இது அந்த குடும்பங்களை கடுமையாக பாதிக் கின்றன. எனவே, பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரு க்கு கூடுதலான இழப்பீடு வழங்கு தோடு, பாதிக்கப்பட்டோரின் குழந்தை களது கல்விச் செலவை ஏற்று, அரசுப் பணியும் வழங்க வேண்டும்” என முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வேண்டு கோள் விடுத்தனர். அதற்கு முதல்வர், “உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், குழந்தைகளுக்கு கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார். இலவச வீடுகள் கட்டித்தர கோரிக்கை தொடர்ந்து, “பட்டாசுத் தொழிலா ளர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கி அரசு சார்பில் வீடுகள் கட்டித்தர வேண்டும்” எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அங்கிருந்த பெண் தொழிலாளர்க ளிடம், ‘அனைவருக்கும் மகளிர் உரி மைத் தொகை கிடைக்கிறதா?’ என முதல்வர் கேட்டதற்கு, சில பெண் தொழிலாளர்கள், மகளிர் உரிமைத் தொகை எங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறினர். அப்போது, ‘மீண்டும் விண்ணப்பியுங்கள். உங்க ளுக்கு உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று முதல்வர் தெரிவித்தார்.
காரிலிருந்து இறங்கி மாற்றுத் திறனாளியிடம் குறைகேட்பு
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வந்த முதல்வர், ஆலையின் நுழைவு வாயில் அருகே இருந்த மாற்றுத் திற னாளியைப் பார்த்ததும் வாக னத்தை விட்டுக் கீழே இறங்கினார். மாற்றுத்திறனாளியான ஸ்ரீவில்லி புத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண் டன் என்பவரிடம் மனுவைப் பெற்றுக் கொண்டார். அப்போது, மணிகண்ட னின் வளர்ப்புத் தாயான பால்பாக்கி யம், அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் அரசுப் பணி வழங்கப்பட வில்லை. எனவே, மணிகண்டனுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அப்போது, மாவட்ட ஆட்சியர் வீ.ப. ஜெயசீலன், மணிகண்டனை வருகிற திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நேரில் சந்திக்குமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, அமைச் சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி. கணேசன், முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் கந்தசாமி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதா ரத்துறை இயக்குநர் ஆனந்த், பட்டாசு ஆலை உரிமையாளர் நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.