பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இன்று காலமானார்.
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் (66), அவரது வீட்டின் கழிவறையில் மயங்கி விழுந்த நிலையில், தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 700 சிறுகதைகள், 340 நாவல்கள், 105 தொடர்களை எழுதியுள்ளார்; மர்மதேசம், விடாது கருப்பு, ருத்ரவீணை, கிருஷ்ணதாசி என்பன உள்ளிட்ட தொடர்கள் எழுதியுள்ளார்.
இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.